No results found

    மளிகைப்பொருள் வாங்க தெரியவில்லையா...?


    குடும்பத்தின் அன்றாட தேவையில் ஒன்று தான் மளிகைப் பொருள். அத்தகைய மளிகைப்பொருள் குறைவாக ஒரு வாரத்திற்காவது சரியாக எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வர வேண்டும். அதுவும் அந்த மளிகைப்பொருள் நீண்ட நாட்களுக்கு வர வேண்டும். எத்தகைய காலநிலை மாறிலும் நாம் வாங்கும் மளிகைப் பொருட்களானது நன்றாக இருக்க வேண்டும். இவ்வாறெல்லாம் வாங்க அனுபவசாலிகளுக்கு நன்றாக தெரியும். ஆனால் ஒரு சிலருக்கு மற்றும் புதுமணத் தம்பதியருக்கு மளிகை வாங்குவதில் நிறைய குழப்பங்கள் மற்றும் சிரமங்கள் ஏற்படும். அப்படி சிரமம் ஏற்படாமல் இருக்க ஒரு சில ஐடியாக்களை அனுபவசாலிகள் பட்டியலிட்டுள்ளனர்.

    மளிகைப்பொருள் வாங்க சில டிப்ஸ்

    1. முதலில் மளிகை கடைக்குச் செல்லும் முன், என்னென்ன வாங்க வேண்டும் என்று ஒரு லிஸ்ட் போட்டுக் கொள்ள வேண்டும். மேலும் அந்த லிஸ்ட்டில் தேவையான பொருட்களை மட்டும் எழுதிக்கொள்ள வேண்டும். அதை மட்டுமே வாங்க வேண்டும். அதை விட்டுவிட்டு கடைக்கு சென்றவுடன் உங்களுக்குப் பிடிக்கும் என்பதற்காக பொருளை வாங்காமல், வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடிக்குமா? என்று எண்ணிப் பார்த்து பின் வாங்குங்கள். இப்படி செய்தால் தேவையில்லாத செலவைத் தவிர்க்கலாம்.

    2. வீட்டில் ஒருவர் மட்டும் என்றால் மளிகைப்பொருள் வாங்குவதில் எந்த கவலையும் கொள்ள வேண்டாம். ஏனெனில் வேண்டிய பொருட்களை வேண்டிப் பொழுது சற்று நடந்து சென்று வாங்கி வரலாம். ஆனால் ஒரு குடும்பத்திற்கு செய்ய வேண்டுமென்றால் முதலில் வாரத்திற்கு ஒரு முறை சென்று வாங்குவது நல்லது. ஏனெனில் அப்போது ஈஸியாக குடும்பத்தை சமாளிக்கலாம்.

    பழகியப் பின் மாதத்திற்கு ஒரு முறை கூட சென்று வாங்கலாம். ஆனால் அப்படி மாதம் ஒரு முறை செல்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அளவு தெரியாமல் பொருட்களை கண்டபடி வாங்கி போட்டுவிட்டு, பிறகு மற்ற செலவுகளுக்கு திண்டாடக்கூடாது. அளவுகளை நன்கு தெரிந்து கொண்டு பிறகே வாங்க வேண்டும். ஆனால் குடும்பத்திற்கு சிறந்தது மாதம் ஒர முறை சென்று வாங்குவதே நல்லது.

    3. மளிகைப் பொருட்களில் சில பொருட்களை ஒரு வருடம் கூட வைத்திருக்க முடியும். உதாரணமாக, அரிசி, கோதுமை, திராட்சை ரசம், மசாலாப் பொருட்கள் மற்றும் ஊறுகாய் போன்றவை இருக்கும். ஆனால் விலை மலிவாக கிடைக்கிறது என்பதற்காக எப்போதாவது உபயோகப்படும் பொருட்களை வாங்கி வைப்பது, தேவையில்லாதது. இல்லை, அடிக்கடி உபயோகப்படும் பொருள் என்று நினைப்பவர்கள் வாங்கிக் கொள்ளலாம். தேவையில்லாத உணவுப்பொருட்களை வாங்கி வைத்து சேகரிப்பது என்பது தேவையில்லாத செலவு தான். ஆகவே ஸ்மார்ட் ஆக இருப்பவர்கள் பொருட்கள் வாங்குவதில், யோசித்து வாங்க வேண்டும்.

    4. மேலும் புதிதாக ஏதேனும் ஒரு பொருள் மார்க்கெட்டில் வெளிவந்தால் அதனை அள்ளிக் கொண்டு வராமல், முதலில் டேஸ்ட் செய்து பின் வேண்டுமென்றால் வாங்க வேண்டும். சில சமயம் சாக்லேட், பிஸ்கட் இருக்கும் இடத்திற்கு சென்றால் அதை அள்ளிக் கொண்டு வர வேண்டும் போல் இருக்கும். அப்படி அள்ளிக் கொண்டு வந்தால் பின் அந்த மாதம் திண்டாட வேண்டியது தான்...

    ஆகவே மேற்கூறிய அனைத்து ஐடியாக்களையும் மனதில் கொண்டு, உங்கள் ஷாப்பிங்கை ஆரம்பியுங்கள்... செலவு சிக்கனமாக இருப்பதோடு, வாழ்க்கையும் சந்தோஷமாக அமையும் என்று அனுபவசாலிகள் கூறுகின்றனர்.

    Previous Next

    نموذج الاتصال