No results found

    மிக்ஸியை புதுசா வெச்சுக்க ஆசையா? இதோ சில டிப்ஸ்...


    வீட்டு வேலைகளை ஈஸியா முடிக்க வீட்டுப் பொருட்கள் அதிகமாக கண்டுபிடிக்கும் அளவிற்கு இன்றைய விஞ்ஞானம் வளர்ச்சியடைந்துள்ளது. அதில் இன்று மிக்ஸி இல்லாத வீட்டை பார்க்கவே முடியாது. ஆனா அந்த மிக்ஸி வீட்ல இருந்தா மடடும் போதாது, அதை நல்லபடியா பராமரிக்கவும் தெரிஞ்சுருக்கணும்.

    மிக்ஸியை புதுசா வெச்சுக்க சில டிப்ஸ்...

    மிக்ஸியை பயன்படுத்தும் போது லோ பவராக இருந்தால் மிக்ஸியை பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால் மிக்ஸியில் உள்ள மோட்டார் பழுதடைந்துவிடும்.

    மிக்ஸியின் பிளேடுகள் மழுங்கி விட்டால் ஒரு கை கல் உப்பை எடுத்து மிக்ஸியில் போட்டு ஒரிரு நிமிடங்கள் அரைத்தால் பிளேடுகள் கூர்மையாகிவிடும். மிக்ஸி பிளேடுகளை சாணம் பிடிக்கக் கூடாது.

    ஜாரில் போட்டு அரைத்து முடித்ததும், பாத்திரங்களை கழுவும் போது சுத்தம் செய்யலாம் எனப் பாத்திரத்தோடு சேர்த்துப் போடாமல், உடனே அதில் தண்ணீரை ஊற்றி அலசி தனியாக எடுத்து வைக்க வேண்டும்.

    பொருள்களை அரைக்கும் போது பிளேடு சுலபமாக சுற்றக்கூடிய அளவு தண்ணீர் விட்டு அரைக்க வேண்டும். இல்லையென்றால் பிளேடு உடையவோ, மோட்டார் எரியவோ கூடும். மாவு கெட்டியாக வேண்டும் என்று கெட்டியாக அரைத்தால் மிக்ஸி எளிதில் பழுதாகிவிடும்.

    ஜாடுகளின் அடிப்பகுதி பழுதாகி விட்டால் அல்லது அடிப்பகுதியில் தண்ணீர் கசிவு இருந்தால் உடனே ஜாடை சரி பார்க்க வேண்டும். இல்லையென்றால் தண்ணீர் மோட்டாரில் இறங்கி மிக்ஸியில் பழுது ஏற்பட்டுவிடும்.

    மிக்ஸியில் சூடான பொருள்களை அரைக்கக் கூடாது. மிக்ஸியில் அரைக்கும் போது சூடு உண்டாகிறதா என்பதைக் கவனித்து இடைவெளி விட்டு அரைக்க வேண்டும்.

    Previous Next

    نموذج الاتصال